Home இந்தியா 25ம் தேதி அமெ.செல்கிறார் மோடி அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை

25ம் தேதி அமெ.செல்கிறார் மோடி அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை

5
0
SHARE

வாஷிங்டன்,ஜூன். 16 & அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்ல உள்ள பிரதமர்  நரேந்திரமோடி, அதிபர் ட்ரம்புடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். 26ம் தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்திக்கும் மோடி இருதரப்பு நல்லுறவு குறித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது எச்1பிவிசா நடைமுறைகளில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளால்,ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து டிரம்பிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மோடி, டிரம்ப் ஆகியோரிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்க, இந்தியா இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை அமையும் என தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளிடையேயான ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், இந்தியபசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அம்சங்களுக்கு பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அறிவித்ததுடன், இந்தியா மீதும், சீனா மீதும் குற்றம்சாட்டினார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு மோடி செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here