Home சம்பவம் விவசாயிகள் மீது  துப்பாக்கிச்சூடு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது  துப்பாக்கிச்சூடு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

7
0
SHARE

திருவாரூர், ஜூன் 16& பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மத்திய பிரதேச ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ஒன்பது விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.,திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,தமிழ்நாடு விவசாய சங்கத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்) தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் கே.பி.ராமலிங்கம் (தி.மு.), காவிரி எஸ்.ரெங்நாதன் ( பாசன விவசாயிகள் சங்கம் ) பி.கே. தெய்வசிகாமணி (விவசாய சங்க கூட்டமைப்பு), குன்னலூர் சந்திரசேகரன் (.மா.கா),எஸ்.எம்.பி. துரைவேலன் (காங்கிரஸ்), விஸ்வநாதன் (ஏரி ஆறுகள் சங்கம்), கே.பாலகிருஷ்ணன் (வாழ்க விவசாயிகள் இயக்கம்), ஜி.சேதுராமன் (நல சங்கம்), முருகையன் (திராவிடர் கழகம்) ஆகியோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர்.வே.துரைமாணிக்கம் (சி.பி.) ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி (சி.பி.) வரவேற்றார்.தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.கலைவாணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில்,மாவட்ட செயலாளர்கள் ஐ.வி.நாகராஜன் (சி.பி.எம்),வை.செல்வராஜ் (சி.பி.),ஜி.சுந்தர மூர்த்தி ,மா.வடிவழகன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கு.பஜ்லுல்ஹக் (மனித நேய மக்கள் கட்சி), வி.மோகன் (தி.) மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின்  நிர்வாகிகள்,விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் திருவாரூர்,நாகப்பட்டிணம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here