Home சினிமா மரகதநாணயம் & ஜொலிக்கிறது

மரகதநாணயம் & ஜொலிக்கிறது

11
0
SHARE

மரகத நாணயம்வரலாற்று காலத்து மன்னர் இரும்பொறை என்பவனின் கல்லறையில் வைக்கப்பட்டிருக்கும் மரகத நாணயம் பலகோடி மதிப்புள்ளது. இந்த நாணயத்தை எடுக்க நினைத்தவர்களும், அதை முதன் முதலில் தொட்டவர்களும் எதிர்பாராத வகையில் மரணமடைகிறார்கள். இப்படி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கும் மேல் அதிகரிக்கிறது. இறுதியாக அந்த மரகத நாணயம் தொல்பொருளாய்வுத்துறையிடம் இருப்பதை தெரிந்து அதை எடுக்க ஆதி, டேனியல், முன்னீஸ்காந்த் டீம் முயற்சி எடுக்கிறது.

ஆதிக்கு பல லட்சம் கடன் ஏற்பட்டு அதை அடைக்க முனீஸ்காந்தின் நவரத்னகல் கடத்தும் தொழிலில் ஈடுபடுகிறார். அப்போதுதான் அந்த மரகத நாணயத்தின் மதிப்பு தெரிந்து அதை எடுக்க நினைக்கிறார்.இதற்கு சென்னையில் இருக்கும் லோக்கல் கடத்தல்காரரான மைம் கோபியிடம் பேரம் பேசுகிறார்கள்.

இந்நிலையில் முனீஸ்காந்த் திடீர் மாரடைப்பில் இறந்து போன தகவல் வருகிறது.இதனால் ஷாக் ஆகும் ஆதியும் டேனியலும் மரகத நாணயத்தின் விபரீதத்தை உணர்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தப்பிக்க மாந்திரீகர் கோட்டா சீனிவாசராவிடம் வருகிறார்கள். அவர் இறந்தவர் ஆவியை எலுமிச்சைப் பழத்தில் இறக்கினால் அந்த ஆத்மா உங்கள் உயிரை காக்கும் என்கிறார்.

ஆனால் எதிர்பாராத வகையில் புதைக்கப்போன இடத்தில் முனீஸ்காந்தின் உடலில் வேறொரு ஆத்மா இறங்கி விடுகிறது.கூடவே இன்னும் மூன்று உடல்கள் தேவை என்று மூனீஸ்காந்த் கூற அடுத்தடுத்து இறந்து போபவர்களை காட்டி உடல்கள் எடுக்க வைக்கிறார். அதில் நாயகி நிக்கி கல்ராணியும் ஒருவர்.

ஆதியும் டேனியலும் இந்த உடல்மாறி வந்த ஆத்மாக்களை வைத்துக்கொண்டு அந்த விலையுர்ந்த மரகத நாணயத்தை எடுத்தாரா இல்லையா என்பதை காமெடி கலந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன்.

ஆதிக்கு அழகான வேடம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் அதன் போக்குக்கு தன் நடிப்பை காட்டியிருப்பதில் தேர்ந்திருக்கிறார். நிக்கி கல்ராணிக்கு படம் முடியும் வரைக்கும் கை தட்டல் கிடைக்கும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் உடல் மொழியும் உட்காரும் ஸ்டைலும் வியக்க வைக்கிறார்.

படத்தின் பலம் முனீஸ்காந்த் பிணமாகவும், பாஸாகவும் இருந்து தன் கூட்டத்தை வழிநடத்தும் அழகு செம காமெடி.இதற்கு ஒருபடி மேலேபோய் வயிறை புண்ணாக்கும் காமெடி தந்திருப்பவர் ஆனந்தராஜ்.

டேனியல்,முருகானந்தம் அருண்ராஜ் காமராஜ் கோட்டா சீனிவாசராவ், எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காமெடிக்கு இவர்கள் போதாதென்று பிரமானந்தம், எம்.எஸ்.பாஸ்கர் மைம் கோபி ஆகியோரும் கைக்கொடுக்கிறார்கள்.

கதையையும் கதைக்கான பின்னணியும் தேர்வு செய்திருப்பது இயக்குனர் சரவனின் புத்திசாலித்தனம். எந்த வித லாஜிக்கையும் யோசிக்காமல் பார்வையாளர்களை சிரிக்கஷ் வைப்பது மட்டுமே நோக்கம் என்று சத்தியம் செய்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையும் அடுத்தடுத்து நகரும் காட்சிகளும் படத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோவுக்கு ஜோடி இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

இயக்குநரின் எண்ணத்தை புரிந்து கொண்டு சரியான எடிட்டிங்கை கொடுத்திருக்கும் பிரசன்னாவின் உழைப்பு படம் போரடிக்காமல் வைக்கிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு கச்சிதம். திபு நைனன் தாமஸின் இசையில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here