Home இந்தியா பாபா ராம்தேவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

பாபா ராம்தேவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

4
0
SHARE

சண்டிகார்,ஜூன். 16 & அரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பா... பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்,சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவரான சுபாஷ் பத்ரா, ஹரியானா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கடந்த மாதம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியபோதும் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவில்லை. இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சம்மன் அனுப்பியபோதும் நேரில் ஆஜராகாத பாபா ராம்தேவ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here