Home இந்தியா கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா பிரதமர் மோடி பங்கேற்பு

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா பிரதமர் மோடி பங்கேற்பு

4
0
SHARE

திருவனந்தபுரம், ஜூன் 16 & கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது முதல் கட்டமாக கொச்சி ஆலுவாவில் இருந்து பாலிவட்டம் வரை 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, நாளை (17ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

மேலும் அவர், மெட்ரோ ரயிலிலும் சிறிது தூரம் பயணம் செய்கிறார். பிரதமர் மோடி கொச்சி வருகையையட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பெண்கள் நலனுக்காககுடும்பஸ்ரீஎன்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 23 திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மெட்ரோ ரயிலுக்கு டிக்கெட் வழங்குவது முதல் ரயில் நிலைய தூய்மை பணி வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதற்கிடையில் கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர் பட்டியலை கேரள அரசு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது.

அந்த பெயர் பட்டியலை பரிசீலனை செய்த பிரதமர் அலுவலகம், கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் உள்பட 7 பேருக்கு மட்டும் பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் அமர அனுமதி அளித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா, மெட்ரோ ரயில் ஆலோசகர் ஸ்ரீதரன், கொச்சி தொகுதி எம்.எல்..வான தாமஸ் ஆகியோருக்கு விழா மேடையில் அமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு விழா மேடையில் அமர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கேரளாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here