Home சம்பவம் ஊரப்பாக்கம் அருகே வழிபறியில் ஈடுப்பட்ட 5 பேர் சிறையில் அடைப்பு

ஊரப்பாக்கம் அருகே வழிபறியில் ஈடுப்பட்ட 5 பேர் சிறையில் அடைப்பு

10
0
SHARE

படப்பை, ஜூன். 16&

ஊரப்பாக்கம் அருகே கத்திக்காட்டி வழியில் ஈடுப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவா; திருமுருகன்(வயது29), இவர்நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது 5 பேர் கொண்ட கும்பல் வழிமடக்கி கத்திக்காட்டி அவரிடம் இருந்து ரூ.1500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஒடியது. இது குறித்து திருமுருகன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து திருமுருகனிடம் கத்திக்காட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட காரணைப்புதுச்சேரியை சேர்ந்த டேவிட் (வயது26), கூடுவாஞ்சேரி சேர்ந்தவர்கள் பிரகாஷ்(வயது26), அன்பரசன் (வயது22), அருண்குமார் (வயது24), மற்றும் நந்திவரம் பகுதியை சேர்ந்த கோபால்(வயது22), ஆகிய 5 பேரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here