Home இந்தியா ரூ.15 ஆயிரம் கோடியில் நவீன வசதிகளுடன் ரயில் பெட்டிகள் புதுப்பிப்பு

ரூ.15 ஆயிரம் கோடியில் நவீன வசதிகளுடன் ரயில் பெட்டிகள் புதுப்பிப்பு

11
0
SHARE

புதுடெல்லி,ஜூன்15& ரூ.15 ஆயிரம் கோடி செலவில் 40,000 ரயில் பெட்டிகளை நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

டெல்லியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவது தொடர்பான இந்தத் திட்டத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:

சவாலான இந்தப் பணி அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும். பழைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியை வரும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தி விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தத் திட்டத்தின்படி, ரயில்களில் தற்போது இணைக்கப்பட்டிருக்கும் 25 ஆயிரம் பழைய பெட்டிகள் முற்றிலும் புதிதாக புதுப்பிக்கப்படவுள்ளன. மேலும், 15 ஆயிரம் பெட்டிகள் ரயில்களுக்கு புதிதாக வாங்கப்படவுள்ளன.

பழைய பெட்டிகளுக்கு மாற்றாக, புதுப்பிக்கப்பட்டு சேர்க்கப்பட இருக்கும் ரயில் பெட்டிகளில், பல்வேறு நவீன வசதிகள் செய்யப்படவுள்ளன.

அந்த பெட்டிகளில், இருக்கை வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பயோ கழிப்பறை வசதிகள் செய்யப்படவுள்ளன. இதுபோல், ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் தலா ரூ.30 லட்சம் செலவில் நவீன வசதிகள் செய்யப்படவுள்ளன.

இந்த திட்டத்தை தனியாக மேற்கொள்வதற்கான வசதிகள் இந்திய ரயில் தொழிற்சாலைகளில் இல்லை.ஆதலால், இதில் தனியார் துறையையும் ஈடுபடுத்த இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here