Home சம்பவம் மக்கள் பணத்தில் இலவச விளம்பரமா? மத்தியஅரசைகண்டித்து திருப்பூரில் போராட்டம்

மக்கள் பணத்தில் இலவச விளம்பரமா? மத்தியஅரசைகண்டித்து திருப்பூரில் போராட்டம்

8
0
SHARE

திருப்பூர், ஜூன் 15& மக்களை பல வழிகளிலும் வேதனைக்குள் தள்ளியிருக்கும் நரேந்திர மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தை எடுத்து தனது ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளை விளம்பரப்படுத்த உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்றாண்டு வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி மோடி அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிக்கும் அரசு, அந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் காக்கவோ, அந்த நிறுவனங்களின் மூலம் சமூகத்திற்கு, மக்களுக்கு

அளிக்கும் சேவையை மேம்படுத்தவோ நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக பாராமுகமாக இருந்து அந்த நிறுவனங்களை நஷ்டத்தில் தள்ளுவதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது.இந்தசூழ்நிலையில்பொதுத்துறைநிறுவனங்கள்நிதிஒதுக்கிநாடுமுழுவதும்பல்வேறுமாவட்டங்களில்மத்தியஅரசின்சாதனைவிழாக்களைக்கொண்டாடவேண்டும்என்றுஉத்தரவுபிறப்பித்துசுற்றறிக்கை

அனுப்பியிருக்கின்றனர். இது பொதுத்துறை விரோத, ஊழியர் விரோத நடவடிக்கை என்பது மட்டுமின்றி, மக்களின் பொதுப்பணத்தில் அரசியல் லாபம் தேடும் அப்பட்டமான சுயநல முயற்சி என்று பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்நிலையில், திருப்பூரில் பி.எஸ்.என்.எல் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக மோடி அரசின் பொதுத்துறை விரோத, சுயநல அரசியல் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு என்.எப்.டி.இ செயலாளர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை வகித்தார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், கிளைச் செயலாளர்கள் குமரவேல், விஸ்வநாதன், தங்கராஜ், வின்சென்ட், என்எப்டிஇ ஜெகநாதன், ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகி சௌந்தரபாண்டியன் ஆகியோர் மோடி அரற கண்டித்துப் பேசினர். இதில் அதிகாரிகள், ஊழியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here