Home இந்தியா பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு லண்டன் கோர்ட் வழங்கியது

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு லண்டன் கோர்ட் வழங்கியது

15
0
SHARE

லண்டன்,ஜூன். 15 & லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, டிசம்பர் வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஊடகங்கள் தன்னை குறிவைத்து தாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முடக்கப்பட்டுள்ள கிங் பிஷர் நிறுவனத் தலைவரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று,அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி விட்டார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டுவர அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஸ்காட்லாந்து போலீசார் அவரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் டிசம்பர் 4ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஊடகங்கள் தன்னை குறிவைத்து தாக்கி வருவதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்திய அரசு தனக்கு எதிராக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அதில் தீர்ப்பு வரும் வரை ஊடகங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள விஜய் மல்லையா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். தன் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here