Home இந்தியா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளுடன்பாஜஆலோசனை?

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளுடன்பாஜஆலோசனை?

13
0
SHARE

புதுடெல்லி, ஜூன் 15 & குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வரும் 23ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் மூத்தத் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

குடியரசுத் தலைவராக உள்ள  பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், அடுத்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு,அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 28ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தவுடன், மனுக்கள் மீதான பரிசீலனை 29ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற வரும் 1ம் தேதி கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து ஜூலை 17ந் தேதி நடைபெறும் வாக்குப் பதிவின் போது, எம்.பி.க்கள், எம்.எல்..க்கள் வாக்களிக்க ஏதுவாக, நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.வாக்குகள் வரும் 20ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு,ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதே போல் எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வேட்பாளரை தேர்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு டெல்லியில் சோனியா தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்தவும் பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர்  வெங்கையாநாயுடு கூறுகையில், “பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தும் முன் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்என்றார்.

அடுத்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, வெங்கையாநாயுடு ஆகியோர் சந்தித்து பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற 23ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு முன் வேட்பாளர் பெயரை வெளியிட பாஜ திட்டமிட்டுள்ளது. எனவே 23ந் தேதி வேட்பாளர் பெயரை பாஜ வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளராக தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை நியமிக்கலாமா என பாஜ தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய பிரதேச மாநில கவர்னராக இருக்கும் திரவுபதி முர்மு ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் அடிபடுகிறது.

இது தவிர பஞ்சாப் முன்னாள் முதல்வரும் அகாலி தளம் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல், மத்திய சமூக நிதித்துறை  அமைச்ர் தவர்சந்த் கெலாட் ஆகியோரது பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்னாள் மேற்கு வங்காள கவர்னரும், காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தி, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here