Home இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி

14
0
SHARE

ஜெய்ப்பூர்,ஜூன். 15 & ராணுவ டாங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட `நாக்’ ஏவுகணையை ராஜஸ்தான் பாலைவனத்தில் வெற்றிகரமாக செலுத்தி இந்தியா சோதனை செய்துள்ளது.

எதிரிகளின் ராணுவ டாங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் `நாக்’ வகை ஏவுகணையை ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை கடந்த 2016ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் மகாஜன் தளத்தில் சோதனை செய்த போது அது 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. தற்போது இந்த ஏவுகணை புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது தலைமுறையை சேர்ந்த இந்த நாக் ஏவுகணை, அதிநவீன அகச்சிவப்பு கதிரை உள்ளுணரும் தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தரையிலிருந்தும், விமானத்திலிருந்து தாக்கும் வகையில் இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தரையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும், விமானத்திலிருந்து 7 முதல் 10 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு சோதனை முகாமில், மூத்த விஞ்ஞானிகளின் முன்னிலையில், இந்த ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்திய விஞ்ஞான ஆலோசகர் ஜி சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் இந்த சோதனையை மேற்பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here