Home சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் 32 சவரன் நகை கொள்ளை

கோபிசெட்டிபாளையத்தில் 32 சவரன் நகை கொள்ளை

12
0
SHARE

ஈரோடு, ஜூன், 14& கோபிசெட்டி பாளையத்தில் பீரோக்களை திறந்து 32 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அம்பிகைநகரில் குடியிருக்கும் பாபு(35)என்பவர் அவினாசியில் கருங்கல்லைசைஸ்செய்யும் தொழிற்சாலைநடத்திவருகிறார். இவருக்கு மனைவி ஹேமா மற்றும் ஒருபெண் குழந்தைஉள்ளது. இவர் அடிக்கடிதொழிழ்சாலையின் பணியின் காரணமாக அவினாசியில் தங்கிக்கொள்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று இரவு பணியின் நிமிர்த்தமாக தொழிற்சாலையில் பாபு தங்கியுள்ளார். கோபிசெட்டிபாளையம் அம்பிகைநகரில் உள்ளஅவரது வீட்டில் மனைவி ஹேமாமற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் காலையில் ஹேமா படுகையறையிலிருந்து வெளியில் வந்து பார்த்தபோது அருகில் அறைகளின் கதவுகள் பீரோக்கள் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால் அவினாசியில் உள்ள தனது கணவர் பாபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பாபு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் கலைக்கப்பட்டு பீரோவின் சேப்டிலாக்கரில் வைக்கப்படிருந்த 32 சவரன்தங்கநகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதனைதொடர்ந்து கோபிகாவல்துறையினருக்குதகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் பாபுவின் வீட்டிற்குவந்தகோபிகொவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம்,உதவிஆய்வாளர்கள் நாகலட்சுமி,காயத்திரிமற்றும் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டுஉடைக்கப்பட்டபீரோவையும் கொள்ளையடிக்கவந்தநபர்கள் எவ்வழியில் வந்திருக்கககூடும் என்றும் விபரங்கள் சேகரித்துஅருகில் உள்ளவீடுகளில் சிசிடிவிகேமராவில் உள்ளபதிவுகளைக்கொண்டும் தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுதடயங்கள் சேகரித்தும் விசாரணைமேற்கொண்டுள்ளனர். அதிககுடியிப்புநிறைந்தபகுதியில் வீட்டினுள் ஆட்கள் தூக்கிக்கொண்டிருக்கும்போதேகொள்ளையடிக்கப்பட்டு இப்பகுதிபொதுமக்களிடம் அச்சத்தைஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here