Home விளையாட்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தெ.ஆ. 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தெ.ஆ. 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட்

16
0
SHARE

லண்டன், ஜூன் 12 & .சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய போட்டியில்பிபிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா  தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

இந்த போட்டிக்கான டாசில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா அணியில் பர்னெல் நீக்கப்பட்டு பெலுக்வாயோ சேர்க்கப்பட்டார்அம்லா மற்றும் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் 10 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 35 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 12.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. அந்த அணி 17.3 ஓவரில் 76 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. அம்லா 54 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து டி காக் உடன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். தென்ஆப்பிரிக்கா 21.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 68 பந்தில் அரைசதம் அடித்த டி காக் 72 பந்தில் 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது3வது விக்கெட்டுக்கு டு பளிசிஸ் உடன் கேப்டன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டி வில்லியர்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் 12 பந்தில் 16 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் மில்லரும் ரன்அவுட் ஆனார்.

இதனால் 142 ரன்கள் எடுப்பதற்குள் தென்ஆப்பிரிக்கா நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. களத்தில் நிலைத்து நின்ற டு பிளிசிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க தென்ஆப்பிரிக்கா தடுமாற ஆரம்பித்தது. டு பிளிசிஸ் அவுட்டாகும்போது தென்ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் டுமினியைத் தவிர மற்ற வீரர்களான கிறிஸ் மோரிஸ் (4), பெலுக்வாயோ (4), ரபாடா (5), மோர்கல் (0), இம்ரான் தாஹிர் (1) சொற்ப ரன்களில் அவுட் ஆக தென்ஆப்பிரிக்கா 44.3 ஓவரில் 191 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. டுமினி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்இந்திய அணி சார்பில் பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here