Home சம்பவம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீச்சு

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீச்சு

10
0
SHARE

கோழிக்கோடு,ஜூன். 11&  கேரள மாநிலம், கோழிக்கோட்டிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் இந்த அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர். இதில், அலுவலகத்தின் முன்பகுதியிலுள்ள ஜன்னல்கள் சேதமடைந்தன. எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வீசப்பட்ட வெடிகுண்டுகளில் ஒன்று மட்டுமே வெடித்துள்ளது. மேலும், அலுவலகத்தின் வாயிலில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. பின்னர், அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  குற்றம்சாட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன், திருவனந்தபுரத்திலுள்ள பாஜ அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டை வீசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதல் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக பாஜ அப்போது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here