Home விளையாட்டு தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி இரண்டாவது சுற்றில் திருச்சி அணிகள் வெற்றி

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி இரண்டாவது சுற்றில் திருச்சி அணிகள் வெற்றி

10
0
SHARE

கும்பகோணம், ஜூன் 11& தென்னிந்திய அளவிலான பகலிரவு கால்பந்து போட்டிகள் கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற  இரண்டாவது சுற்றில் திருச்சி அணிகள் வெற்றி பெற்றுள்ளது.

கும்பகோணம் அரசு பொறியியற் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி இன்று 11 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இரண்டாவது நாளான நேற்று சென்னை யுனைடெட் கிளப் அணியை திருச்சி ஃபீனிக்ஸ் புட்பால் கிளப் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, கும்பகோணம் அரசு கால்பந்து கழக அணியை திருச்சி கேஆர்ஐஜி புட்பால் கிளப் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காரைக்குடி பிட் கால்பந்து அணியை தஞ்சாவூர் பூமி கால்பந்து அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கும்பகோணம் செலக்ட் கால்பந்து அணியை சேலம் வர்ஷா புட்பால் கிளப் அணியினர் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். திருச்சி கான்பிடண்ட் கால்பந்து அணியினரை திருச்சி பிகேஎம் கால்பந்து அணியினரை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் திருச்சியைச் சேர்ந்து மூன்று அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இறுதிப் போட்டிகள் இன்று 11 ம் தேதி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here