Home சம்பவம் காரில் வந்து வழிப்பறி செய்தவர் கைது

காரில் வந்து வழிப்பறி செய்தவர் கைது

8
0
SHARE

சென்னை, ஜூன், 10& சென்னை, கே.கே.நகர் பகுதியில் ,காரில் வந்து  கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கே.கே.நகர், மேற்கு ராஜு  தெருவை சேர்ந்தவர் மகேஷ்(42), இவர்  கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகிறார். கடந்த 7 ம் தேதி அன்று, வேலை  முடிந்து இரவு,வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது, காரில் வந்த நபர் ஒருவர்  மகேசிடம், முகவரி கேட்பது போன்று,  கத்தி முனையில் பணத்தை பறித்துகொண்டு தப்பிவிட்டார்.

இது தொடர்பாக கே.கே. நகர் போலீசார்  வழக்குப்பதிவு , விருகம்பாக்கம், ராமலிங்க நகரை  சேர்ந்த கிறிஸ்டோபர் ஆனந்த்(40) என்பவர்  கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து  கார், கத்தி ஆகியவை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here