Home சம்பவம் கள்ளநோட்டு கடத்திய 5 பேர் கைதுபோலீஸார் விசாரணை

கள்ளநோட்டு கடத்திய 5 பேர் கைதுபோலீஸார் விசாரணை

14
0
SHARE

தேனி, ஜூன்.8,தேனி மாவட்டம், போடிமெட்டு வழியாக கள்ளநோட்டு கடத்தியதாக 5 பேரை கேரளா போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கள்ளநோட்டு கடத்தப்பட்டதா என தமிழக போலீஸார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக & கேரளா எல்லைப் பகுதியான போடிமெட்டு மலை கிராமத்தில் தமிழக போலீஸாரும், கேரள போலீஸாரும் தனித்தனியே சோதனை சாவடி அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.

இதில் போடி வழியாக கேரளத்துக்குச்சென்ற வாகனம் ஒன்றை கேரள போலீஸார் சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த வாகனத்தை கேரளா போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அவை கள்ள நோட்டுக்கள் என தெரியவந்ததன் பேரில் வாகனத்தில் வந்த மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் (42), கேரள மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த சுனில்குமார் (45), புத்தடியை சேர்ந்த ரவிச்சந்திரன் (46), சாலக்காடு பகுதியை சேர்ந்த சகாபுதீன் (44), கருணாகப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்திலிருந்து வந்த வாகனத்தை தமிழக போலீஸார் சோதனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததன் பேரில் தமிழக போலீஸார் தனி விசாரணை நடத்தினர். இதில் கள்ளநோட்டு தமிழகத்திலிருந்து கடத்தப்படவில்லை என்றும் கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் ரூ.38 லட்சம் மதிப்பு கொண்டது என்றும் கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டவை என்பது குறித்து கேரளா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here