Home விளையாட்டு மழையால்தடுமாற்றம்அடைந்தாலும் யுவராஜ் ஆட்டத்தால் மன அழுத்தம் அகன்றது கேப்டன் கோலி புகழாரம்

மழையால்தடுமாற்றம்அடைந்தாலும் யுவராஜ் ஆட்டத்தால் மன அழுத்தம் அகன்றது கேப்டன் கோலி புகழாரம்

12
0
SHARE

புதுடெல்லி, ஜூன். 6 பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யுவராஜ் அதிரடி ஆட்டத்தால், என் மன அழுத்தம் அகன்றது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மழை தடுங்களுக்கு இடையே விளையாடி வந்தது. இந்த நிலையில், இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம் தொடங்கியவுடன் தன் மன அழுத்தம் அகன்றதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்  பேட் செய்த விதம் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதாக அமைந்தது. அந்த அடிக்குப்பிறகே நாங்களும் பந்துகளை அடித்து ஆடுவதற்கான நம்பிக்கை பிறந்தது. யுவராஜ் சிங் விளையாடிய விதமானது, அவர் மட்டுமே அத்தகைய விதத்தில் பந்துகளை அடிக்க முடியும் என்பதாக இருந்தது.

இதில், 40 ரன்கள் வரை நான் ஆட்டத்தில் ஒன்று, இரண்டு என்றே எடுத்து வந்தேன். பெரிய ஷாட்களுக்கு போக முடியவில்லை காரணம் சூழ்நிலை இரண்டுங்கெட்டானக இருந்தது. கிட்டத்தட்ட 4 முறை மழையினால் போய்விட்டு போய்விட்டு வந்தோம்.

எனவே நீண்ட இன்னிங்ஸை ஆடி கடைசி வரை ஆடி அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறை நன்றாக செட்டில் ஆன பிறகும் உள்ளே போய் விட்டு மீண்டும் களத்தில் இறங்குவது என்பது உத்வேகத்தை கெடுக்கும் விஷயமாகும், ஒவ்வொரு முறையும் பந்துகளை முதலிலிருந்து பார்த்து தயார் செய்ய வேண்டியதாக இருந்தது.

யுவராஜ் இறங்கியதும் மழைக்காக உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை. அவர் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்கியது என் மீதிருந்த அழுத்தத்தை அகற்றியது. நான் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் ஆட்டமிழந்தவுடன் நான் அடிக்கத் தொடங்கினேன், நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் உத்வேகம் வரும்போது அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here