Home சம்பவம் கோவை ஜி.எச்.சிலிருந்து டிஸ்சார்ஜ் கோடநாடு கொலை குற்றவாளி சயான் கைது

கோவை ஜி.எச்.சிலிருந்து டிஸ்சார்ஜ் கோடநாடு கொலை குற்றவாளி சயான் கைது

10
0
SHARE

கோவை, ஜூன். 7&மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த ஏப்.23ம் தேதி 11 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்தது. அவர்கள் அங்கிருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, மற்றொரு காவலாளியையும் தாக்கி விட்டு பங்களாவில் இருந்து நகை, பணம், ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சயான் பாலக்காடு அருகே நடந்த விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த மாதம் 17ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எலும்பு முறிவு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைக்கு கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன்,

கோத்தகிரி டி.எஸ்.பி முத்தமிழ், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயனை கைது செய்தனர். கருப்பு துணியால் முகத்தை மூடி வீல் சேரில் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here