Home சம்பவம் கதிராமங்கலம் செல்ல முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது

கதிராமங்கலம் செல்ல முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது

12
0
SHARE

கும்பகோணம், ஜூன். 7& தனித்தீவாக மாற்றப்பட்டுள்ள கதிராமங்கலம் கிராம மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவும், உண்மை நிலையை கண்டறியவும்  முயற்சித்த ,தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்மாவட்டம்கதிராமங்கலத்தில்ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளது. இந்த குழாயில் ஆங்காங்கே கசிவு ஏற்பட்டதால், குழாயை மாற்றிவிட்டு புதிய குழாய் அமைக்க முடிவு செய்து, அதற்கான தளவாடப் பொருட்களை அங்கு கொண்டு வந்து குவித்தது.

இதனால்கதிராமங்கலம்கிராமமக்கள்அச்சமைடந்து, .என்.ஜி.சி நிறுவனம் கச்சாய் எண்ணெய் எடுக்கும் பணியை கைவிட்டு இங்கிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.

இந்த பணியை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் பத்து தினங்கள் இலக்கு வைத்து கடந்த 2 ம் தேதி புதிய குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இந்த பணி மேற்கொள்ளும்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் அதனை தடுக்கும் வகையில் பாதுகாப்புக்காக 800 போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸார் பாதுகாப்பினை வைத்துக் கொண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் 5 ம் தேதி மாலையே தன்னுடைய பணியை முழுமையாக அதாவது புதிய குழாயை முழுமையாக மாற்றிவிட்டது.

ஆனாலும், கதிராமங்கலம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸாரால் அச்சமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் ஊருக்கு வெளியே உள்ள தென்னந்தோப்பில் ஒன்று கூடினர். அவர்களிடம் கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, போலீஸாரை பாதுகாப்பு பணியிலிருந்து திரும்ப பெறுவது என உத்திரவாதம் அளித்தை அடுத்து நேற்று முன்தினம் இரவு அக்கிராம மக்கள் ஊருக்குள் வந்தனர்.

இந்நிலையில்நேற்றுகாலைகதிராமங்கலம்தெருவில்இருந்தபோலீஸார் . .என்.ஜி.சி நிறுவனம் உள்ள  இடத்தில் குவிக்கப்பட்டனர். .

இதற்கிடையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கதிராமங்கலம் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிலமையை நேரில் பார்க்க வந்தனர். அவர்களை கும்பகோணம் புறவழிச்சாலையிலேயே டி.எஸ்.பி கணேசமூர்த்தி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் கூறுகையில்: விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் துளி அளவு கூட அனுமதிக்க மாட்டேன் என  ஜெயலலிதா கூறினார். அவரது பெயரை வைத்துக் கொண்டு, ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மத்தியரசிடம் மண்டியிட்டு, ஜெயலலிதாவின் கொள்கைக்கு மாறாக விவசாயிகளிடமிருந்து நிலங்களை பிடிங்கி ஓ.என்.ஜி.சிக்கு கொடுக்க முயற்சிக்கிறது.

காவல்துறையைவைத்துக்கொண்டுகதிராமங்கலம்கிராமத்தைதனித்துவிடப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை சந்திக்க விவசாயிகள் சங்கத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here