Home விளையாட்டு இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு திறமை போதவில்லை முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி...

இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு திறமை போதவில்லை முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி வேதனை

11
0
SHARE

புதுடெல்லி, ஜூன் 6& ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வெற்றி கொள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு திறமை போதவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஐசிசி இணையதளத்திற்காக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது

இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவாளராக பாகிஸ்தான் அணி படுமோசமாக விளையாடியதைப் பார்க்கும் போது வேதனை ஏற்பட்டது. வெற்றி பெறும் அணி என்று கணிக்கப்பட்ட இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதற்குரிய தன்மையுடன் ஆதிக்கம் செலுத்தியது, பாகிஸ்தான் அணியோ நொடிந்து விழுந்தது. டாஸ் வென்ற சர்பராஸ் அகமது மழை வரும் என்ற எதிர்ப்பாப்புக்கு இணங்க இரண்டாவதாக பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் மோசமான திட்டமிடுதல் அதைவிடவும் மோசமான செயல்படுத்தல், தவிரவும் படுமோசமான பீல்டிங் ஆகியவை இரண்டாவதாக பேட் செய்யக்கூடிய அனுகூலங்களை ஒன்றுமில்லாமல் செய்தது. முகமது ஆமீர் அருமையான முதல் ஓவரை வீசினார். அவர் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் விசித்திரமாக புதிய பந்தை ஸ்பின்னர் இமாத் வாசிமிடம் அளித்தார். மேகமூட்டமான சூழலில் ஸ்பின்னரை தொடங்கச் சொன்னது புதிராக இருந்தது. ஏனெனில் மேட்ச் என்ன அரபு நாட்டிலா நடந்தது ? இந்தியாவுக்கு ஆச்சரிமளிக்க வேண்டும் என்று சர்பராஸ் நினைத்திருந்தாலும் ஓரிரு ஓவர்களுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சை கொண்டு வந்திருக்க வேண்டும். ரோஹித் சர்மா, ஷிகர் தவண் போன்ற திறமையான வீரர்களை நிலைபெற அனுமதித்தால் அதன் பிறகு அவர்களை நிறுத்துவது கடினம். இதைத்தான் பாகிஸ்தான் நேற்று அனுமதித்தது. களைப்படைந்த பாகிஸ்தான் பந்து வீச்சை பிறகு விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடினர். பிறகு ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான் பீல்டிங் மோசமாக இருந்தது. 30 அடி வட்டத்துக்குள்ளேயே நிறைய சிங்கிள்களை விட்டுக் கொடுத்தார். அதோடு கோட்டை விட்ட கேட்ச்களும் இணைந்தது. பதற்றம் இல்லை என்று போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் கூறினாலும் வீரர்கள் பதற்றம் வெளிப்படையாக தெரிந்தது.

பேட்ஸ்மென்களுக்குத் திறமை போதவில்லை. பேட்டிங்க்கு சாதகமான பிட்சில் 164 ரன்கள் என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. காரணம் இந்திய அணி சர்வ சாதாரணமாக 319 ரன்களை அடித்தது. ஆனால், பாகிஸ்தான் அணியினரால் ரன்கள் எடுக்க முடியவில்லை? இதற்கு காரணம் திறமை போதவில்லை என்பதே முக்கிய காரணம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here