Home விளையாட்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து ரியல் மேட்ரிட் சாம்பியன்

ஐரோப்பிய கோப்பை கால்பந்து ரியல் மேட்ரிட் சாம்பியன்

12
0
SHARE

லண்டன், ஜூன் 5&  இங்கிலாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பைக்கான சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மேட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

இங்கிலாந்தின் கார்டிப் நகரில், ஐரோப்பிய கோப்பைக்கான சாம்பியன் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில், ஸ்பெயினின் புகழ்பெற்ற ரியல் மேட்ரிட் அணியும், ஜூவன்டஸ் அணியும் மோதின. இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் திரண்டனர்.

கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் போட்டி மிகவும் விறுவிறுப்படைந்தது. இறுதியில், 4&1 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வென்றது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கோப்பையை 12 முறை வென்று ரியல் மேட்ரிட் அணி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here