Home தமிழகம் மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர்

மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கலெக்டர்

9
0
SHARE

திருவாரூர், ஜூன். 2   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டது.முகாமில்,74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

மாவட்டக் கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடந்த முகாமில் அவர் பேசுகையில்,மக்கள் நேர்காணல் முகாமின் நோக்கமானது மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவதற்கானதாகும்.அரசு அலுவலர்கள் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்.  திருவாரூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு,விவசாயிகளே குளங்களை தூர்வாரி விலையில்லாமல் வண்டல் மண் எடுத்து, விளை நிலங்களை , மேம்படுத்தலாம் என ஆணையிட்டுள்ளது.அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு அதில் உள்ள வண்டல் மண்ணை கொண்டு விவசாயிகள் விளைநிலங்களை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்கள். பருவமழை வருவதற்கு முன்பாகவே குளங்களை தூர்வார வேண்டும்.

இதுமழைநீரைசேகரிக்கமிகவும்உதவியாகஇருக்கும்.மாவட்டத்தில் தோராயமாக குளங்களில் 28 லட்சம் குயுபிக் மீட்டர் மண் எடுப்பதால் 1 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க முடியும். ஆகவே விவசாய பெருங்குடி மக்கள் விளைநிலங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு குளங்களை தூர்வாரி விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து 16 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும்,12 பேருக்கு முதியோர் உதவித் தொகையும்,5 பேருக்கு விதவை உதவித் தொகையும்,மாற்றுத்திறனாளியான ஒருவருக்கு உதவித் தொகையும்,8 பேர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரங்களும்,20 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்,10 நபர்களுக்கு வேளாண்மைத்துறையின் சார்பில் இடுப்பொருட்களும்,2 நபர்களுக்கு மழைத்தூர் வான்கள் என மொத்தம் 74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன்,வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிசந்திரன்,வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி,மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ்,வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here