Home சம்பவம் கும்பகோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி

கும்பகோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி

16
0
SHARE

சுவாமிமலை, மே 23& கும்பகோணத்தை அடுத்த முள்ளங்குடி மதகுசாலை பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். கூலி தொழிலாளி.இவருக்கு சுமதி(37) என்ற மனைவியும், கீதா(25) , அனு(20) என்ற இரண்டு மகள்களும்,  பிரவீன்(17) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பிரவீன் தன்னுடன் படிக்கும் நண்பர் ஒருவர்,  பிரவீன் பதினோறாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று விளையாட்டாக கூறியுள்ளான். ஆனால் பிரவீன் தேர்ச்சி பெற்று விட்டான். நண்பன் கூறியதை கேட்டு மனமுடைந்த பிரவீன், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதனை பார்த்த தாய் சுமதி மற்றும் சகோதரி கீதா ஆகியோர் பிரவீன் மீது கொண்டிருந்த பாசத்தால் மீதமுள்ள விஷத்தை குடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வைத்தியநாதன், விஷமருந்திய மூன்று பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.