Home சினிமா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்தார் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்தார் கமல்ஹாசன்

21
0
SHARE

தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சினிமா உலகில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகம் இருக்கும் நிலையில் அவர் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவருக்கு பண ரீதியான சிக்கல் எழுந்திருக்கிறதோ என்கிற சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதுகுறித்து நடிகர் கமலஹாசன் கூறும்போது, சினிமாவை விட டி.வி. மூலம் அதிகமான மக்களை சென்றடைய முடியும். அதே நேரத்தில் பணமும் எனக்கு முக்கியம். இந்த துறையில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களில் காசு வாங்காமல் நான் சும்மா நடிப்பதில்லை. படத்தை போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உற்சாகமாக இருக்கிறது. பணம், அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி இது. இரண்டும் ஒன்றாக கிடைக்கும் போது யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?” என்று கூறியிருகிறார் கமல்.