Home இந்தியா மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

25
0
SHARE

கோலாலம்பூர், மே. 15  மடகாஸ்கரிலிருந்து விமானம் மூலம் மலேசிய £கடத்தி வரப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.அதன் சர்வ தேச மதிப்பு 1.2 மில்லியன் ரிங்கட் ஆகும்.

மலேசியாவிற்கு சட்ட விரோதமாக வன விலங்கு மற்றும் அதன் உறுப்புகள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் மலேசிய விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மடகாஸ்கரில் இருந்து மலேசியா வரும் விமானத்தில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்த பெட்டிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர் ,அப்போது ஒரு பெட்டியில் கற்கள் என லேபில் ஒட்டப்பட்டிருந்தது, சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அப் பெட்டிய திறந்து பார்த்த போது அதில் 330 அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வ தேச மதிப்பு 1.2 மில்லியன் ரிங்கட் ஆகும்.

இவைகளை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் ,அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இக் கடத்தல் தொடர்பாக யாரையும் சுங்கத்துறையினர் கைது செய்யவில்லை.