Home தமிழகம் 8 மாத அகவிலைப்படி உடனடி விடுப்பு வேலை நிறுத்தத்தை கைவிடவேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

8 மாத அகவிலைப்படி உடனடி விடுப்பு வேலை நிறுத்தத்தை கைவிடவேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

9
0
SHARE

சென்னை, மே 13&

தொழிலாளர்களுக்கு 8 மாத அகவிலைப்படி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் வேலைநிறுத்த பேராட்டத்தை தொழிலாளர்கள் கைவிடவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்து தொழிலாளர்களின் 13 வது ஊதிய ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை கடந்த 7.3.2017 அன்று நடைபெற்றது அந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுகை தொகை குறித்து உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் நிலுவைத்தொனையை உடனடியாக வழங்க வேண்டும். அப்போதுதான் இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் கலந்துகொள்ள முடியும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று  ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ 500 கோடி ரூபாய் வழங்க முதல்வர் உறுதிஅளித்தார். அதன் அடிப்படையில் 4.5.2017 அன்று  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது.மீண்டும் 8.5.2017 அன்று பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதநிதிகளை வரவைத்து முதல்வர் ரூ.500 கோடி உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தோம். இந்த தொகை போதாது என்றும் இந்த கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் வரும் 15 ம் தேதி வேலைநிறுத்த பேராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

இது குறித்து முதல்வரிடம் தகவல் அளிக்கப்பட்டு மேலும் 250 கோடி விடுப்பதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டார். இதனை 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரூ.750 கோடி முதல்கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள தொகைகள் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளதாக தொழிற்சங்கத்தின் போராட்ட முடிவில் உள்ளனர். போக்குவரத்துறை வரலாற்றில் ஓரே கட்டமாக ரூ.750 கோடி விடுவிக்கப்பட்டது இதுதான் முதல்முறை. இது முதல் தவணை என்றும் இரண்டாம் கட்ட நிதிகள் விரைவாக விடுவிக்கப்படும் என்று தகவல் அளித்தும் போராட்ட நிலைப்பாட்டில் உள்ளனர்.

தற்போது கோடை காலம் என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் வேலைநிறுத்தம் செய்தால் பொதுமக்கள் பாதிப்படைவார்கள் என்பதாலும் அவர்கள் தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ 750 கோடி முதல் தவணையாக விடுவிக்கபடும் என்பதால்  வேலைநிறுத்தபேராட்டத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

போக்குவரத்துகழகத்தில் ஒய்வுபெற்றவர்களுக்கு வழங்கவேண்டி நிதி 1652 கோடி ரூபாய்.7 ஆயிரம் கோடி நிலுவை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவிப்பது கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது என்பதுதான் உண்மை.

இன்றைய சூழ்நிலையில் அரசின் நிதி நெருக்கடியில் ரூ.750 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி நிலுவைத் தொகை ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படும். தற்போது வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு 8 மாத அகவிலைப்படி 79 கோடி ரூபாய் உடனடியாக (நேற்று) அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதி தொகை மூன்று நாட்களில் ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால் தொடர்ந்து வழங்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியானபேருந்துகள்குறித்தும்தகவல்வருகிறது.ஆனால் தற்போது சூழ்நிலையில் புதிய வடிவில் பி.எஸ்.4 என்ற பேருந்து வரவுள்ளது. மறைந்த முதல்வர் அறிவித்தப்படி 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இன்றும் ஒரு வாரத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். சென்னைக்கு தனியாக 100 மினிபேருந்துகள் வாங்கப்படும்.

தொழிலாளர்களின் பென்ஷன் தொடர்பான நீண்டநாள் கோரிக்கை குறித்தும் வழங்கவேண்டிய நிலுகைத்தொகை குறித்தும் அதிகாரிகள் முழு வீச்சில் ஆலோசனை செய்துவருகிறார்கள்.இது பிரச்சனையும் படிபடியாக தீரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்தபோராட்டம்தேவையில்லைஎன்றுஅண்ணாதொழிற்சங்கம்உள்ளிட்ட 25 தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை மற்ற தொழிற்சங்கங்கள் கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களுக்கு  பாதிப்பு ஏற்படதா வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். இவ்வாறு தெரிவித்தார்.