Home இந்தியா கேரளா முன்னாள் அமைச்சர் அலுவலகத்தின் மீது சரமாரி கற்கள் வீசி தாக்குதல்

கேரளா முன்னாள் அமைச்சர் அலுவலகத்தின் மீது சரமாரி கற்கள் வீசி தாக்குதல்

19
0
SHARE

திருவனந்தபுரம், மே. 8&  கேரளாவில் முன்னால் பா.ஜ.க அமைச்சர் ஒ.இராஜகோபால் அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது முன்னால் பா.ஜ.க அமைச்சர் ஒ.இராஜகோபால் அலுவலகம். மோட்டார் வாகனத்தில் வந்த சிலர்அலுவலகத்தின்  மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கார் உட்பட கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்கள் சேதம் அடைந்தன. இச்சம்வசத்திற்கு மார்கிஸ்ட் கட்சித் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள மாநில பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து அக்கட்டடத்தில் குடியிருக்கும் அனில் குமார் என்பவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச் சம்பவத்திற்கு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.