Home இந்தியா கேரள அமைச்சர் மணி மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் பெண்கள் அமைப்பு உறுதி  

கேரள அமைச்சர் மணி மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் பெண்கள் அமைப்பு உறுதி  

18
0
SHARE

திருவனந்தபுரம், ஏப். 29& கேரள மாநிலம் மூணாறில் ஆக்கிரமிப்பு அகற்றலை கண்டித்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்து கேரள மாநிலம் மின்வாரியத்துறை அமைச்சர் எம்.எம். மணி அவதூறாக பேசினார். இதற்கு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஸ்மந்திரி மணி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பெண்கள் ஒற்றுமை என்ற அமைப்பின் தலைவர் கோமதி தலைமையில் மூணாறில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கோமதி தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு பல்வேறு மகளிர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சியினரும் பெண்கள் அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் பெண்கள் நடத்தி வரும் போராட்ட பந்தலுக்குள் ஒரு கும்பல் திடீரென புகுந்தது.ஸ் அவர்கள் அங்கு அமர்ந்திருந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி மகளிர் அமைப்பினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட 20 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே பெண்கள் ஒற்றுமை அமைப்பின் தலைவரும், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் நிர்வாகியுமான கோமதி கூறியதாவது: போராட்ட பந்தலுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.அவர்களின் வட்டார கமிட்டி தலைவர் தலைமையில்தான் அந்த கும்பல் போராட்ட பந்தலுக்கு வந்தனர். யார் எங்களை மிரட்டினாலும் நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. அமைச்சர் மணி மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.