Home இந்தியா உ.பி முதல்வர் யோகி ஸ்டைலில் ஹேர் கட் அசைவம்சாப்பிடகூடாது பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடு

உ.பி முதல்வர் யோகி ஸ்டைலில் ஹேர் கட் அசைவம்சாப்பிடகூடாது பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடு

26
0
SHARE

மீரட், ஏப். 29& உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில்ரிஷாப் அகாடமிஎன்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான சி.பி.எஸ்.. பள்ளி உள்ளது. அது ஆண், பெண் எனஇருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாகும்.

இங்கு 1 முதல் பிளஸ்2 வரை வகுப்புகள் உள்ளன. மொத்தம் 2800 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். ஆங்கில வழி கல்வி பள்ளியான இங்கு படிக்கும் மாணவர்கள் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ஸ்டைலில் முடி வெட்ட பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு முடி வெட்டி வராத மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்து தாக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து பள்ளி செயலாளர் ரஞ்சித் ஜெயின் கூறும் போது, “பொதுவாக எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராணுவ வீரர்கள் போன்று மிக குறைவான அளவில் தலை முடி வளர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம்.

எனவே முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ஸ்டைலில் தலை முடி வெட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்

இதற்கிடையே முகமது ?ஷரீப் என்ற மாணவன் தாடியுடன் வந்ததாக கூறி பள்ளியில் அனுமதிக்கவில்லை. எனவே அந்த மாணவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினான்.

அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதில் அளித்த பள்ளி செயலாளர் ரஞ்சித் ஜெயின், இங்கு படிக்கும் மாணவர்கள் சுத்த சைவ உணவு தான் கொண்டு வர வேண்டும். முட்டை கூட எடுத்து வரக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

தாடி வளர்த்து வர இங்கு அனுமதி கிடையாது. இப்பள்ளி, மதரசா அல்ல என்றும் கூறினார்.இங்கு ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படித்தாலும் அவர்களுக்கு தனித்தனி வகுப்பறைகளில் வைத்து கல்வி கற்பிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.