Home தமிழகம் எஸ்.ஆர்.எம். இயன்முறை மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா பாரிவேந்தர் தொடக்கி வைத்தார்

எஸ்.ஆர்.எம். இயன்முறை மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா பாரிவேந்தர் தொடக்கி வைத்தார்

44
0
SHARE

 

சென்னை, ஏப்.22& எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் இயன்முறை மருத்துவக் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தினை அதன் நிறுவனர் பாரிவேந்தர் துவக்கி வைத்தார்.

எஸ்.ஆர்.எம் இயன்முறை மருத்துவக் கல்லூரி அதன் நிறுவனர் டி.ஆர் பாரிவேந்தரால் 1993ம் துவக்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் முதுகலைப் படிப்பானது டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1999ம் ஆண்டு தொடங்கி இயங்கி வருகிறது.

தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் அங்கமாக 2007ம் ஆண்டு ராமாபுரம் வளாகத்திலிருந்து காட்டாங்குளத்தூர் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. பாடத்திட்டத்தில் உள்ள சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொடுத்து மாணவர்களுக்குப் பட்டம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அடிப்படை உயிர்காக்கும் உதவி பயற்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட இருதய உயிர்காக்கும் உதவி பயிற்சியும் அமெரிக்கா இருதய சங்கம் அங்கீகாரத்துடன் கூடிய பயிற்சியும் சான்றிதழும் வழங்கி வருகிறது. பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் இயன்முறை மருத்துவக் கல்லூரியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயன்முறை மருத்துவம் வளர்ச்சியும் நவினமும் என்ற தலைப்பில் நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மிகச்சிறந்த இயன்முறை மருத்துவ துறையை சார்ந்த வல்லுநர்கள் இயன்முறை மருத்துவத்தின் தற்போதைய நடைமுறைகளையும், எதிர்கால வளர்ச்சியினையும் குறித்தும் பேசினர்.

இயன்முறை மருத்துவம் சார்ந்த செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.  இயன்முறை மருத்துவக் கல்லூரியின் வெள்ளி விழாவை அதன் நிறுவனர் பாரிவேந்தர் துவக்கி வைத்து, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணர்வர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்வி இயக்குனர் சந்திரபிரபா, இயன்முறை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.