Home உலகம் சிரியாவில் அகதிகள் தாக்குதல்

சிரியாவில் அகதிகள் தாக்குதல்

19
0
SHARE

சிரியா, ஏப். 18&   போரின் மூலமுரண் அமைதிதான். அமைதியின்மை ஒரு பூங்காவையும் போர்க்களமாக்கி சிதிலமடையச்செய்துவிடும். அப்படித்தான் பிஞ்சுக்குழந்தைகள் உட்பட 100 அப்பாவிப் பொதுமக்கள் சென்ற பேருந்து தீவிரவாதத்திற்கு இரையாகியுள்ள சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அன்பாளர்களை உறைவில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒவ்வொரு கண்டத்திலும் நிலம், மதம், இனவாதம் என்ற ஏதேனும் ஒரு பிரச்சனை மையத்தில் முகாமிட்டு வருடக்கணக்கில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படியரு தீவிரவாதத் தாக்குதல்தான் ஐ.எஸ் அமைப்பினால் தொடர்ந்து சிரியா மீது நடந்தேறிக்கொண்டேதான் இருக்கிறது. மேலும் சிரியாவின் பாதிக்குப்பாதி நிலத்தை அவ்வமைப்புதான் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டமாஸ்கஸ் மற்றும் அலப்போ என்னும் இருபெரும் தலைநகர்களைக்கொண்டு முறையே ஷியா முஸ்லிமைச் சேர்ந்த அதிபர் ஆசாத்தும் மற்றும் சன்னி அமைப்பைச் சேர்ந்த மிதவாதக்கட்சிகளும் ஆண்டுவரும் இந்நேரத்தில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதை தான் விரும்பவில்லை என்று அதிபர் ஆசாத் தெரிவித்திருந்தார்.

மேலும் நிலைமையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையாக மக்கள் 100 பேரை பாதுகாப்பிற்காக ஏற்றிக்கொண்டு புகலிடம் நோக்கி விரைந்துகொண்டிருந்த பேருந்து ரஷடின் பகுதியைக் கடக்கும்போது தீவிரவாதிகளால் வெடிகுண்டு ஏற்றிவரப்பட்ட காரில் மோதி வெடித்துச்சிதறியதில் 100 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு சன்னி அமைப்போ, சந்தேகிக்கப்படும் ஐ.எஸ் அமைப்போ இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.!