Home உலகம் பெருவில் கனமழை; 10 பேர் பலி  12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்

பெருவில் கனமழை; 10 பேர் பலி  12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்

71
0
SHARE

லிமா, மார்ச் 18&  தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பெய்து வரும் கனமழைக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் அங்கு இயல்பு நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  பெருவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் தலைநகர் லிமா போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  தொடர் கனமழையின் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கனமழை குறித்து பெருவின் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில், “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எல் நினோ (பூமியின் வெப்பநிலை ஏற்றத்தாழ்வை குறிப்பது) காரணமாக பெருவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை அடுத்த இரு வாரங்களுக்குத் தொடரும்.  இந்த ஆண்டில் மட்டும் பெருவில் பெய்த கனமழைக்கு இதுவரை 62 பேர் பலியாகியுள்ளனர். 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிவாரணப் பணிகள் குறித்து பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குக்சின்ஸ்கி கூறும்போது, “கனமழையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன” என்று கூறியுள்ளார்.