Home தமிழகம் திருச்சி அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

69
0
SHARE

திருச்சி, மார்ச் 10& திருச்சி அடுத்த சிறுகனூர் தொடக்கபள்ளி மற்றும் சிறுவர் இல்லத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.

திருச்சி அடுத்த சிறுகனூர் கருண் தொடக்கப்பள்ளி மற்றும் சிறுவர் இல்லத்தில் எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மகளிர் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி  பள்ளி மற்றும் இல்லத்தின் தாளாளர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் எய்ம் டூ ஹை அமைப்பின் நிறுவனர் மோகன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் மனோகரன், சைல்டு லைன் திருச்சி மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை இம்மாகுலேட் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பள்ளி மற்றும் இல்ல குழந்தைகளிடம் பள்ளி படிப்பின் மகத்துவம்,அவர்களின் எதிர்கால திட்டங்களை எப்படி முனைப்புடன் செயல்படுத்துவது.அதற்காக படிப்பில் எப்படி போராடி வெற்றிபெறுவது, கல்வி திறனை மேம்படுத்தி கொள்வது, மேலும் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றி கருத்துகளை கூறினார்கள். மாணவர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பின் மதியம் கருண் இல்லத்தில் தங்கி படிக்கும் நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்கு மதிய அசைவ உணவு எயிம் டூ ஹை அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.