Home தமிழகம் ஆசிரியர் தகுதி தேர்வால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்

ஆசிரியர் தகுதி தேர்வால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்

60
0
SHARE

சென்னை, மார்ச்.8& தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்   செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர்நிலை 4ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 29. 4.2017 மற்றும் 30. 4.2017 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வும்  29. 4.2017 மற்றும் 30. 4.2017 தேதிகளில் நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே இருதேர்வுகளையும் தொடர் இரு நாட்களில் நடத்த ஏதுவாக, விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற் பயிற்சி அலுவலர் தேர்வு தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கண்காணிப்பாளர் மற்றும் உடற் பயிற்சி அலுவலர் பணிக்கு மே 20 ம் தேதியும், செயல் அலுவலர் நிலை 3க்கு ஜூன் 10ம் தேதியும், செயல் அலுவலர்   நிலை 4க்கு ஜூன் 11ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.